குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை – பகீர் கிளப்பும் திருமாவளவன்!

Share this News:

சென்னை (25 மே 2020): குடியரசுத் தலைவரை ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது குறித்து உச்ச நீதிமன்ற விசாரணை நடத்தப்படுமா? என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார். அப்போது இவ்விவகாரம் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல் என விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பாஜக தலித்துகளின் ஆதரவாளர்கள் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், “குடியரசுத்தலைவரின் குடும்பத்தினரை ராஜஸ்தானில் #பிரம்மாகோவிலின்உள்ளே நுழையவிடாமல்படிகட்டிலேயே வழிபடச்செய்தார்களே. அது ஏன்? அதன் உண்மைநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட பாஜகமுன்வருமா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Share this News: