சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை நீக்கம்!

ரியாத் (03 ஜன 2021): சவூதி அரேபியாவில் வெளிநாடுகளுக்கான விமான மற்றும் தரை போக்குவரத்து தடை ஜனவரி 3 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டு, அனைத்து எல்லைகளும் இன்று திறக்கப்படுகின்றன. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிவேக வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுதி எல்லை மூடப்பட்டது. இந்நிலையில் கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரும் இப்போது நாட்டிற்குள் நுழையலாம். சவுதி அரேபியா அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும்…

மேலும்...

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு!

புதுடெல்லி (31 ஆக 2020): இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில்,…

மேலும்...

தொடங்கும் விமான போக்குவரத்து – மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் அஸ்ஸாம் மாநில பாஜக அரசு!

புதுடெல்லி (22 மே 2020): உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அஸ்ஸாம் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் அ “சிறிய நேரம் கொண்ட பயணங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இருக்காது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். உள்ளூர் விமானங்கள் மூலம் வருபவர்களை 14…

மேலும்...

சீனாவுக்கான சவூதி ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து!

ரியாத் (03 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவுக்கான சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனாவுக்கான விமான போக்குரவத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் சவூதி அரேபியாவும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து தொடரும் என்றும்…

மேலும்...