ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)

ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)

துபாய் (12 பிப்ரவரி 2024): ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்து உள்ளது அல் ஐன். இங்கே வசிக்கும் மக்கள் இன்று அதிகாலை திங்கள்கிழமை விழித்து எழுந்தபோது ஆலங்கட்டி மழை கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். நேற்று இரவு முழுவதும் பலத்த மழை, இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை-யும் பெய்தது.  இந்த கனமழையால் அபுதாபி, ராசல் கைமா மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. அல் ஐனில் நேற்று இரவு பெய்த ஆலங்கட்டி மழையால், பாலைவனப்…

மேலும்...

புனித மக்காவில் திடீர் மழை வெள்ளம் – அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – VIDEO

மக்கா (24 டிச 2022): சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரை வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் தாக்கியது, கார்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. எனினும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை. பல முக்கிய சாலைகள் மூடப்பட்ட நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எதிர்பாராத இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தால் மக்காவிற்கு வந்துள்ள உம்ரா யாத்திரிகர்கள் திகைத்து நின்றனர். எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்க 200க்கும் மேற்பட்ட…

மேலும்...

சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப்…

மேலும்...

ஜித்தா பெருமழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கும் இழப்பீடு!

ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார். சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட…

மேலும்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை (05 நவ 2022): வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக…

மேலும்...

முஸ்லிம்கள்தான் எங்களுக்கு உதவினார்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடக மக்கள்!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடகாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியபோது, ​​தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்நகருக்கு அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு களத்தில் இறங்கிய முஸ்லீம் தன்னார்வலர்கள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுடன் உதவி வருகின்றனர். அங்குள்ள மக்கள் நாங்கள் ஒட்டுப் போட்ட தலைவர்கள் இறந்துவிட்டோமா அல்லது உயிருடன் இருக்கிறோமா என்று…

மேலும்...

ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளில் மழை வெள்ளத்தால் 1300 பேர் மாயம்!

ஜெர்மனி (17 ஜூலை 2021): மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1300 பேர் மாயமாகியுள்ளனர். 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது. ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள்,…

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80…

மேலும்...

கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின்…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...