ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)

ஆலங்கட்டி மழை-யால் அண்டார்டிகா ஆக மாறிய துபாய்! (வீடியோ)
Share this News:

துபாய் (12 பிப்ரவரி 2024): ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய்க்கு அடுத்து உள்ளது அல் ஐன். இங்கே வசிக்கும் மக்கள் இன்று அதிகாலை திங்கள்கிழமை விழித்து எழுந்தபோது ஆலங்கட்டி மழை கண்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர்.

நேற்று இரவு முழுவதும் பலத்த மழை, இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை-யும் பெய்தது.  இந்த கனமழையால் அபுதாபி, ராசல் கைமா மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

அல் ஐனில் நேற்று இரவு பெய்த ஆலங்கட்டி மழையால், பாலைவனப் பிரதேசமான அல் ஐன் தெருக்கள் அண்டார்டிகா போன்று பனிப்பிரதேசம் ஆக மாறியது. (இந்நேரம்.காம்)

தெரு முழுக்க வெள்ளை நிறத்தில் பனிப்படலம் சூழ்ந்துள்ளதை அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வீடியோவாக பதிந்தது சமூக வலைத் தளத்தில் வைரலாக ஆகி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் பிப்ரவரி 12 ஆம் தேதி நாள் முழுவதும் மழை தொடரும் எனவும், எதிர் வரும் நாட்களில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து,  அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

 


Share this News: