ஜித்தா (27 நவ 2022): ஜித்தா மழையில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜித்தாவில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சேதம் அடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என சட்ட நிபுணர் முஹம்மது அல் வுஹைபி தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு ஏற்படும் சேதங்கள் இழப்பீடு பெற தகுதியானவை. விரிவான காப்பீட்டுக் கொள்கைகளைக் கொண்ட வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி உள்ள வாகனங்களுக்கு சிறப்புக் குழு மூலம் பெறப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
இழப்பீடு விண்ணப்பத்தை ஏற்று ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இழப்பீடு பெறும் உரிமை பறிக்கப்படும்.
2009 ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அதே பொறிமுறையின் மூலம் இம்முறையும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் மாநகர சபை தெரிவித்துள்ளது.