இந்தியாவில் எகிறும் கொரோனா பரவல் – ஒரேநாளில் இவ்வளவா?

புதுடெல்லி (15 ஏப் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் அதிர்ச்சி!

லக்னோ (09 ஏப் 2021): உத்திர பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி பெற வந்த மூன்று பெண்களுக்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதையொத்த சரோஜ், அனார்கலி மற்றும் சத்தியாவதி ஆகிய மூன்று பெண்களுக்கு கோவிட் தடுப்பூசிக்கு பதிலாக அம்மை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊசி பெற்றவர்களிடம் ஆதார் தகவல்கள் எதுவும் பெறாமல் தடுப்பூசி போட்டதாகவும் தடுப்பூசி பெற்ற பின்னர் சில அசவுகரியங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊசி பெற்றவர்கள் தெரிவித்ததை அடுத்து இவ்விவகாரம்…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்படுத்த 5 அம்ச திட்டம்!

புதுடெல்லி (28 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்…

மேலும்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா!

ஜெனிவா (20 மார்ச் 2021): உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாகப் பின்லாந்து முதல்…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (21 பிப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,264 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,91,651 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 11,667 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

மேலும்...

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!

சென்னை (13 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது….

மேலும்...

இந்தியாவில் ட்விட்டருக்கு தடை வருமா?

புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...