புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு ட்விட்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.. ஆனால் இந்த கோரிக்கைக்கு ட்விட்டர் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனால் மத்திய அரசு ட்விட்டர் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளது.
முன்னதாக, விவசாயிகளின் வேலைநிறுத்தம் தொடர்பான சில ஹேஷ்டேக்குகளை அகற்றுமாறு மத்திய அரசு ட்விட்டரிடம் கோரியிருந்தது. பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட் செய்த சுமார் 250 ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் முடக்கியிருந்தது. மேலும் ஐடி சட்டம் 69 ஏ இன் கீழ் ட்விட்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு ட்வீட்டராய் எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.