வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...

GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

குவைத்தில் கூகுள் பே சேவை!

குவைத் (25 ஜன 2023) குவைத்தில் கூகுள் பே சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை விரைவாகச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே மார்ச் மாதத்திற்குள் குவைத்தில் செயல்படத் தொடங்கும் என்று உள்ளூர் ஊடகமான அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, கூகுள் பே சேவை மூன்று வங்கிகளில்…

மேலும்...

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸுக்குக் கீழே பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்கள் ஆண்டின் மிகக் குளிரான நாட்களாக இருக்கும். என்று வானிலை ஆய்வாளர் அடில் அல் சாடூன் தெரிவித்தார். குவைத்தின் அஸ்ராக் சீசன் ஜனவரி 24 முதல் ஜனவரி 31 வரை…

மேலும்...

குவைத்தில் பால் விலை உயர்கிறதா? – அமைச்சகம் விளக்கம்!

குவைத் (09 ஜன 2023): குவைத்தில் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சந்தையில் விலையை சரிபார்க்க தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அல் மராய் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என குவைத் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அல் மராய் நிறுவனம் விண்ணப்பம் செய்தால் அமைச்சகம் அதனை…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...