கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருந்ததற்கு தண்டனையா? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஜூலை 2020): “கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருப்பதற்கு மின் கட்டணத்தைப் பார்த்தால் மக்கள் ஷாக் ஆகும் அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: தமிழக அரசின் மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. மக்கள் எல்லாரும் வீட்டில் இருந்ததால் மின்சாரம் அதிகமாக செலவாகி இருக்கும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கில்…

மேலும்...

மருத்துவமனைகளின் அலட்சியம் – சாதாரண நோயாளிகளும் பலியாகும் பரிதாபம்!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 26,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 671 உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,53,751 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இப்படியிருக்க அரசின் உத்தரவால் பெரும்பாலான கொரோனா…

மேலும்...

பிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்!

மலப்புரம் (17 ஜூலை 2020): கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அளித்த பிளாஸ்மா மூலம் 32 கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் கோவிட் 19 மருத்துப் பிரிவின் உயர் அதிகாரி, டாக்டர் ஷினாஸ் பாபு கூறுகையில், “ஏற்கனவே முஸ்லிம்கள் வழங்கிய பிளாஸ்மா மூலம் 32 பேர் பலனடைந்துள்ளனர். மேலும் 250 முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.” என்றார். மேலும் ,”எங்கள் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவரையும்…

மேலும்...

சென்னையில் குறையும் ஆபத்து!

சென்னை (17 ஜூலை 2020): ‘சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்’ என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ஒரு நபர் மூலம் எத்தனை நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்ற கணக்கெடுப்பை நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல்…

மேலும்...

பிரபல எழுத்தாளருக்கு கொரோனா தொற்று!

சென்னை (16 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா-வின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்கின்றது. இன்று மட்டும் 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

மரணம் பற்றி தெரிய மரணித்துதான் பார்க்க வேண்டுமா? – முதல்வர் மீது கமல் கட்சி செயலர் காட்டம்!

சென்னை (16 ஜூலை 2020): நம்மவர் மீது விழுந்து பிராண்டி உங்கள் இயலாமையை தீர்த்துக் கொள்ள முயலாதீர்கள்” என்று எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலத்தில் செய்தியாளர்களிடம் ‘கொரோனா பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது’ என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களே… ஒருவருக்கு மரணத்தின் வலி தெரிய வேண்டுமென்றால் மரணித்துப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது போல கொரோனா நோய் தொற்று…

மேலும்...

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (16 ஜூலை 2020): தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன்,…

மேலும்...

பிரபல தெலுங்கு கவிஞருக்கு சிறையில் கொரோனா பாஸிட்டிவ்!

மும்பை (16 ஜூலை 2020): ஜனவரி 01, 2008 அன்று நடைபெற்ற கொரேகாவ்ன் பீமா வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய எல்கார் பரிஷத் வழக்கு சம்பந்தமாக பல்வேறு பேராளி மற்று சமூக ஆர்வலர் குழுக்களின் தலைவர்கள் தேசிய பாதுகபப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரபல தெலுங்கு கவிஞர் வாரவர ராவ்-வும் 2018-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். குறைந்தபட்சம் அவருடைய வயது மூப்பைக் கருத்தில் கொண்டாவது அவரை விடுதலை செய்ய வேண்டும் என…

மேலும்...

92 தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஜாமீன்-டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று…

மேலும்...

திரையுலகினரை குறி வைத்து தாக்கும் கொரோனா -அதிர்ச்சியில் நடிகர் அர்ஜுன்!

பெங்களூரு (16 ஜூலை 2020): அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுகுறித்து துர்வா சார்ஜாவே ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர்…

மேலும்...