மலப்புரம் (17 ஜூலை 2020): கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அளித்த பிளாஸ்மா மூலம் 32 கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் கோவிட் 19 மருத்துப் பிரிவின் உயர் அதிகாரி, டாக்டர் ஷினாஸ் பாபு கூறுகையில், “ஏற்கனவே முஸ்லிம்கள் வழங்கிய பிளாஸ்மா மூலம் 32 பேர் பலனடைந்துள்ளனர். மேலும் 250 முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.” என்றார்.
மேலும் ,”எங்கள் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவரையும் இணைத்து மூன்று வாட்ஸ் அப் குழுமங்கள் உள்ளன. அதில் 750 பேர் உள்ளனர். அவர்களிடம் எங்களுக்கு பிளாஸ்மா தேவை குறித்து தெரிவித்தவுடன் மனமுவந்து தானம் வழங்க முன்வருகின்றனர்” என்றார்.