170 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல் – அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்!

புதுடெல்லி (12 மார்ச் 2021): பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் கட்சி தாவி கொண்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அல்லது சிட்டிங் எம்.எல்.க்களின் கட்சி தாவல் அக்கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஆர் வெளியிட்ட தரவுகளின்படி, 2016 முதல் 2020 வரை 170 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

மேலும்...

தமிமுன் அன்சாரி எம்எல்ஏ திமுகவுக்கு ஆதரவு!

சென்னை (11 மார்ச் 2021): மனித நேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர்…

மேலும்...

மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்!

சென்னை (09 மார்ச் 2021): வரும் சட்டமன்ற 2 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஒரு தொகுதியில் ‘கத்தரிக்கோல்’ சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து…

மேலும்...

ஒரே நாளில் காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா!

புதுச்சேரி (21 பிப் 2021): புதுச்சேரியில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் . காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் இன்று ராஜினாமா செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நன்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின்…

மேலும்...
Durai Murugan

திமுக நிர்வாகி திடீர் நீக்கம் -பரபரப்பு பின்னணி!

சென்னை (14 பிப் 2021): திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக முகமாக இருந்து வருகிறார். திமுகவில் திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு வடக்கு என்று பிரிக்கப்பட்டபோது எ.வ.வேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்து வருகிறார்….

மேலும்...

திமுகவை வீழ்த்த எடப்பாடியுடன் கைகோர்க்க சசிகலா திட்டம்!

சென்னை (09 பிப் 2021): எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிரி அல்ல திமுகவே எதிரி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்….

மேலும்...
ரேசன் அரசி சாப்பாடு

புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!

இப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு, 1 kg அளவுக்குப் பச்சரிசி, 1 kg சீனி, ஆறேழு அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் ஆகியவை கிடைத்தன. — ஒரு வாரம் கழித்து, பொங்கல் வேட்டி கிடைத்தது. ரேஷன் கடைக்காரன் சேலையைப் பதுக்கிவிட்டான் போல. இரண்டில் ஒன்று தான் எனச்சொல்லி விட்டான்….

மேலும்...