திமுகவை எதிர்த்து போராட காங்கிரஸ் முடிவு!

ஸ்ரீபெரும்புதுார் (01 ஏப் 2022): பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத திமுகவை எதிர்த்து காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு போராட திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,- – ஆறு; சுயேச்சை – நான்கு; அ.தி.மு.க.,- – மூன்று; பா.ம.க.,- மற்றும் காங்.,- தலா ஓரிடம் வென்றன.தி.மு.க., தலைமை கழகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி தலைவர் பதவியை, காங்.,குக்கு ஒதுக்கியது. கடந்த 2ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் தி.மு.க., உத்தரவை மீறி, தி.மு.க.,வைச்…

மேலும்...

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

மேலும்...

சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

சென்னை (06 மார்ச் 2022): திமுக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் பல நிர்வாகிகள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும்...

சென்னை மேயராகும் 28 வயது பிரியா ராஜன்!

சென்னை (03 மார்ச் 2022): சென்னை மேயராக 28 வயது பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 28 வயதான பிரியா ராஜன்…

மேலும்...

விசிகவை தோற்கடிக்க உதவியதா திமுக?

தாம்பரம் (23 பிப் 2022): தாம்பரம் பகுதியில் கூட்டணி கட்சி விசிக வேட்பாளரை தோற்கடிக்க சுயேட்சைக்கு திமுக எம்.எல்.ஏ உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் பிரசுரங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர…

மேலும்...

வெற்றி பெற்றார் கட்சி மாறினார் – பத்தே நிமிடத்தில் நடந்த பரபரப்பு!

மதுரை (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...

ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128…

மேலும்...