கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு!

தோஹா, கத்தார் (29 செப் 2025): தோஹா மீது நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்காக, கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. இனியொரு முறை இத்தகைய தாக்குதலை கத்தார் மீது ஒருபோதும் நடத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் நெதன்யாஹு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை…

மேலும்...

பாகிஸ்தானுடன் சவுதி பரஸ்பர அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, ​​சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்) சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்…

மேலும்...
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: வலுக்கும் உலகத் தலைவர்களின் கண்டனங்கள்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: உலகத் தலைவர்களின் வலுக்கும் கண்டனங்கள்

தோஹா, கத்தார் (10 செப் 2025):  கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. கத்தார் நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பின் அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிப்பதை…

மேலும்...
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.   உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.   இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. இந் நிலையில், ஹமாஸ்…

மேலும்...
ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

தோஹா, கத்தார் (பிப்ரவரி 26, 2025):  எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28-02-2025 ஆம் தேதி மாலை புனித ரமளான் பிறை நிலவைக் காண முன்வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கத்தார் அமைச்சகம். எதிர்வரும் மார்ச் 1, 2025 அன்று வளைகுடா உட்பட உலகமெங்கும் ரமளான் நோன்பு மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கத்தாரில் உள்ள Crescent Sighting Committee , ரமளான் பிறை காண மேற்கண்ட அழைப்பினை விடுவித்துள்ளது. சூரிய அஸ்தமனத் தொழுகைக்குப் பிறகு பிறையைக் கண்ணால்…

மேலும்...

கத்தாரில் களை கட்டும் பேரீத்தம்பழத் திருவிழா!

தோஹா, கத்தார் (28 ஜூலை 2024) :  தோஹாவில் பிரபல சுற்றுலா தளமான சூக் வாகிஃப் (Souq Waqif ) இல், கடந்த ஜூலை 23 ஆம் தேதி பேரித்தம்பழத் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது.  திருவிழாவில் பங்கு பெறும் பேரீத்தம் பழங்கள் அனைத்தும் கத்தார் நாட்டில் விளைந்த பேரீத்தம் பழங்களாகும். துவங்கிய நான்கு நாட்களில் 81,492 கிலோகிராம் பேரிச்சம்பழங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான X இல்…

மேலும்...
கத்தாரில் அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி!

பறக்கும் டாக்ஸி கத்தாரில் அறிமுகம்!

தோஹா, கத்தார் (19 மே, 2024): பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி-களின் சேவை, கத்தார் நாட்டில்  விரைவில் துவங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக, அடுத்த ஆறு மாதங்களுள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாக்ஸிகள் பறக்கத் துவங்கும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிகழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு உத்திகளை நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது கத்தார். கத்தாரில் ஏற்கனவே பெட்ரோல் டீஸலில் இயங்கும் கனரக வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டில்  75…

மேலும்...
ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் "ஹிம்யான்" கார்டு அறிமுகம்!

ஆன்லைன் மோசடியைத் தடுக்க கத்தாரில் “ஹிம்யான்” கார்டு அறிமுகம்!

தோஹா, கத்தார் (08 ஏப்ரல் 2024) : கத்தார் அரசின் மத்திய வங்கியான Qatar Central Bank  (Himyan) ஹிமியான் ப்ரீபெய்ட் கார்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கத்தார் நாட்டில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடப்பதைத்  தடுக்கவும், Mastercard & Visa போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கத்தார் நாடு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹிம்யான் கார்டு முழுக்க…

மேலும்...
பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை - கத்தார்

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்

தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது. இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...
கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

கத்தாரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் துவக்கம்!

தோஹா, கத்தார் (01 பிப்ரவரி 2024):  கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று எதிர்வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அல் முஜாதிலாஹ் (Al-Mujadilah) எனும் அறக்கட்டளை மூலம் இந்த பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் இயங்கும். இதற்காக நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியின் வரவேற்புரையை கத்தார் நாட்டின் ராணி ஷேகா மோஸா பின்த் நாசர் நிகழ்த்தி, பின் வருமாறு உரையாற்றினார். (இந்நேரம்.காம்) “பெண்களுக்கான இந்த பிரத்யேக பள்ளிவாசலில் தொழுகை, வணக்க வழிபாடுகள்…

மேலும்...