
ராஜினாமா செய்கிறாரா சோனியா காந்தி? – இன்று பரபரப்பு விவாதம்!
புதுடெல்லி (13 மார்ச் 2022): ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய…