உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது கடினம் – அதிர்ச்சியில் பாஜக!

Share this News:

லக்னோ (27 பிப் 2022): உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என பா.ஜ.க வின் உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, லக்கிம்பூர் கெரியில் நடக்கும் வன்முறைகள், தேர்தலில் பாஜகவை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கணக்கெடுப்பின்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை நம்பி பாஜக காய் நகர்த்தியுள்ளது. ஆனால் யாதவர்களும் உயர்சாதி விவசாயிகளும் எஸ்பிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

சிறுபான்மையினரின் வாக்கு வங்கியில் ஒவைசி விரிசலை உருவாக்க மாட்டார் என்றும் அந்த சர்வே கூறுகிறது. இம்முறை சிறுபான்மையினர் SP தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

எஸ்சி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடைய வாக்குகள் பிரிக்கப்படும். இது பாஜகவுக்கு சாதகமாக அமையும்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாட் மற்றும் யாதவர்கள் செல்வாக்கு உள்ள 150க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் SP-RLD கூட்டணி பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பேரணி நடத்திய பகுதிகளில் அக்கட்சிக்கு நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஐந்தாம் கட்ட தேர்தலில் 2.24 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அடுத்த கட்ட தேர்தல்கள் மார்ச் 3 மற்றும் 7ம் தேதி நடைபெறுகின்றன. இதில் தேர்தல் நடைபெறவுள்ள , பா.ஜ.க வுக்கு பலத்த செல்வாக்கு உள்ள அயோத்தியும், காங்கிரசுக்கு வாய்ப்புள்ள அமேதியும் குறிப்பிடத்தக்க தொகுதிகள். அமேதியில் பாஜக சார்பில் சஞ்சய் சிங் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் சுக்லா போட்டியிடுகிறார்.

அயோத்தியில் பாஜக வேட்பாளராக வி.பி.குப்தா போட்டியிடுகிறார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக பவன் பாண்டே போட்டியிடுகிறார். 2017 தேர்தலில் இங்கு மொத்தமுள்ள 61 இடங்களில் 50 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இது இப்படியிருக்க முதல் மூன்று கட்ட தேர்தல்களில் பாஜகவுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. எனவே இனிவரும் தேர்தல்கள் பாஜாகவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.


Share this News:

Leave a Reply