அதிமுகவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் பாஜக!

சென்னை (30 டிச 2020): தேர்தலுக்கு பிறகே முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதாக பாஜக தெரிவித்துள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய…

மேலும்...

அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது. பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா…

மேலும்...

நிதிஷ்குமார் பாஜகவில் இணையப் போகிறாரா? – ஆர்.ஜே.டி தலைவர் கேள்வி!

புதுடெல்லி (27 டிச 2020): நிதிஷ்குமார் தனது கட்சியை பஜாகவுன் இணைக்க திட்டம் எதுவும் வகுத்துள்ளாரா? என்று ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கேள்வி எழுப்பியுள்ளார். அருணச்சல பிரதேசத்தில் ஆறு ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் நிதிஷ்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ மட்டுமே அவரிடம் அங்கு உள்ளது. இந்நிலையில் பீகார் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா நிதிஷ்குமாரை கடுமையாக சாடியுள்ளார். @ஏழு எம்.எல்.ஏக்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர்…

மேலும்...

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லையா? – பீதியை கிளப்பும் செல்லூர் ராஜூ!

மதுரை (26 டிச 2020): அகில இந்திய கட்சி என்பதால் பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிவிக்கையில், “பாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான்…

மேலும்...

நிதிஷ்குமாருக்கு ஆப்பு வைத்த பாஜக!

பாட்னா (26 டிச 2020): அருணாச்சல பிரதேசத்தில், நிதீஷ் குமாரின் ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகாருக்குப் பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமார் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதன்மூலம் 7 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த நிதிஷ்குமார் கட்சியில் இப்போது ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார். இதற்கிடையில், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் உறுப்பினர் உட்பட 48 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் உள்ளனர்.

மேலும்...

மேற்கு வங்கத்தை குஜராத் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது – மம்தா பானர்ஜி!

கொல்கத்தா (24 டிச 2020): மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் பாஜக மீது கடுமையாக சாடிய மம்தா  “நாங்கள் எங்கள் மண்ணை மதிக்கிறோம். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை.  குஜராத் ஆக  மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற வாரம் மேற்கு வங்கம்  வந்தபோது திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான…

மேலும்...

மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக வெல்ல தவறினால் பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய தயாரா?

புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். “வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் அதிரடி திருப்பம் – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்பி மனைவி!

கொல்கத்தா 921 டிச 2020): மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். முன்னாள் ஆசிரியரான சுஜாதா கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். ‘எனக்கு ஆறுதல் தேவை, எனக்கு மரியாதை தேவை. நான் ஒரு திறமையான கட்சியின் திறமையான தலைவராக இருக்க விரும்புகிறேன். பாஜகவில் அது இல்லை. அதில் தவறான மற்றும் ஊழல் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்….

மேலும்...

அதிமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் போர்க்கொடி!

சென்னை (21 டிச 2020): எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவிட்டு பின்பு அப்படியில்லை எண்டு மழுப்புவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, மிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணிக்குள் மோதல் – தமிழக பாஜக தலைவரை நீக்க அதிமுக கோரிக்கை!

சென்னை (20 டிச 2020): எல் முருகன் சச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே நேற்று…

மேலும்...