சென்னை (21 டிச 2020): எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவிட்டு பின்பு அப்படியில்லை எண்டு மழுப்புவது தொடர் கதையாகி வருகிறது.
இதற்கிடையே கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, மிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டுகளை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள் தான் அரசியல்வாதியாக வருவர் ” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவை பாஜக விமர்சிப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், “நான் அப்படி சொல்லவில்லை ஊடகங்கள் திரித்து கூறிவிட்டன” என்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.