பாஜக தலைவர்கள் கனடா நாட்டிற்குள் நுழைய தடை?

டொரோண்டோ (02 செப் 2022): பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல முக்கிய தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை கண்டித்து அவர்கள் கனடாவில் காலடி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன….

மேலும்...

வீட்டு பணிப்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த பாஜக தலைவர்!

ராஞ்சி (31 ஆக 2022): வீட்டுப் பணிப் பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்திய பாஜக மகளிர் பிரிவு தலைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீமா பத்ரா, பல ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண் சுனிதாவை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து பணிப்பெண் பேசிய வீடியோ வைரலானது. அந்த காட்சிகளில் சுனிதா என்ற ஊழியர் உதவியின்றி உட்கார முடியாத நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது. உடலில் காயங்கள் உள்ளன. மேலும் அந்த வீடியோவில், தன்னை கட்டையால் தாக்கியதாகவும், பற்கள்…

மேலும்...

எம்.எல்.ஏ.க்களை வாங்க ரூ.800 கோடி ஒதுக்கிய பாஜக- முதல்வர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஆக 2022): டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக 800கோடி ஒத்துக்கியிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்தது. இதில் மொத்தம் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 53 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யலாம் என பேசப்படுகிறது. இதனால் டெல்லி…

மேலும்...

முஹம்மது நபிக்கு எதிரான பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு புனித மக்கா, மதீனா ஹரமைன் ஷரீபைன் கடும் கண்டனம்!

மக்கா (24 ஆக. 2022): முகமது நபிக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்த இழிவான கருத்துக்கு, மக்கா செய்தி ஊடகமான ஹரமைன் ஷரிஃபைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆளும் பாஜகவின் தெலுங்கானா மாநில உறுப்பினரான ராஜா சிங் எம்.எல்.ஏ, திங்கள் கிழமை அன்று சமூக வலைதளத்தில் முகமது நபிக்கு எதிரான அவதூறான கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பின. இதனால் தெலுங்கானா மாநிலத்தில்…

மேலும்...

முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய பாஜக எம்எல்ஏ கைது!

ஐதராபாத் (23 ஆக 2022): முஹம்மது நபி குறித்து இழிவாக பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா  பாஜக எம்எல்ஏ ராஜா சிங் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பினார். இதனை அடுத்து தெலுங்கானாவில் பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மேலும் ராஜா சிங்கிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ராஜா சிங் செவ்வாய் கிழமை காலை போலீசாரால் கைது…

மேலும்...

மாட்டுக்காக 5 பேரை கொலை செய்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ – வைரல் வீடியோ!

ஜெய்ப்பூர் (21 ஆக 2022)’ ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா, 5 பேரை கொலை செய்துள்ளதாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து சக நண்பர்களிடம் அவர் பேசும் வீடியோவில் “பசுக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கொன்றதாக பெருமையாக கூறுகிறார். இந்த வாக்குமூலம் வீடியோ ஆதாரத்துட ன் சிக்கியதை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வீடியோவை எதிர் கட்சி பிரமுகர்கள் பாகிர்ந்து அவர் மீது உரிய…

மேலும்...

பில்கீஸ் பானு கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் பிராமணர்கள் – பாஜக எம் எல் ஏ!

புதுடெல்லி (18 ஆக 2022):பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களை விடுவிக்க காரணமாக இருந்த குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சிகே ரவுல்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் . “அவர்கள் (11 குற்றவாளிகள்) குற்றவாளிகளா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பிராமணர்கள் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது. மேலும், அவர்கள் நன்கு பண்பட்ட மனிதர்கள்.”என்றார் கடந்த…

மேலும்...

அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீச்சு – குற்றவாளிகளுக்கு காவலர் உதவி?

மதுரை (16 ஆக 2022): மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பெண்கள் தலைமறைவாக இருக்க காவலர் ஒருவர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாஜக தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மூன்று பெண்களும் தலைமறைவாக இருப்பதற்கு மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு காவலர் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய…

மேலும்...

பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

மதுரை (14 ஆக2022): பா.ஜ.,கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.க,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருமான சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். பா.ஜ.கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு…

மேலும்...

பீகாரில் முடிவுக்கு வந்தது பாஜக நிதிஷ் கூட்டணி!

பாட்னா (09 ஆக 2022); பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் முதல்வர் நிதிஷ்குமார். மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடித்தத்தையும் ஆளுநரிடம் வழங்கினார் நிதிஷ்குமார். இதன் மூலம் பாஜக நிதிஷ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை…

மேலும்...