ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் நூலிழையில் உயிர் தப்பினார்!
சென்னை (06 மார்ச் 2023): ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். தந்தையின் இசையிலும் யுவன் இசையிலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக…