முஸ்லிமாகும் நடிகர் ரஜினி?

Share this News:

சென்னை (16 ஜன 2023): நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள தர்காவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் சென்றிருந்தார். அச்சமயத்தில் நடிகர் ரஜினி முஸ்லிம் ஆகி விட்டார் என்ற செய்தி பரவி வந்தது.

இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது.

திரைப்பட கதாபாத்திரத்திற்காக முஸ்லிம் வேடமிட்டு நடிகர் ரஜினி நடித்து வரும் தகவல் தற்போது உறுதி செய்யப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply