பாலிவுட் பிரபலங்கள் மீது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு!

Share this News:

சென்னை (25 ஜூலை 2020): “நான் இந்தி திரைப்படங்களில் பணிபுரிவதை தடுக்க ஒரு கூட்டமே செயல்படுகிறது” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

வானொலி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் என்னிடம் செல்ல வேண்டாம் தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பல தடைகள் தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டதே காரணம் என்ற கருத்து நிலவி வரும் சூழலில் ரஹ்மானும் இதேபோன்ற புறக்கணிப்புகளுக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply