அபுதாபியில் முதல் இந்து கோவில்; புதிய வடிவமைப்பை தேர்வு செய்தார் யூஏஇ அதிபர்!

அபுதாபி (11 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபுதாபியில் முதல் இந்து கோவிலின் வடிவமைப்பை தேர்வு செய்தார். வளைகுடா ஊடகமான கலீஜ் டைம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது. வழக்கமான கோவிலுக்கு பதிலாக, பாரம்பரிய கற்கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கோவிலின் பொறுப்பாளர் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கோவிலின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகையில் ஷேக் முகமதுவைச் சந்தித்து கோவிலின் இரண்டு திட்டங்களைக்…

மேலும்...

மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

அபுதாபி மீது ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

அபுதாபி (17 ஜன 2022): அபுதாபி விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரண்டு இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும் அடங்குவர். மேலும் ஆறு பேர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஈரான் ஆதரவு ஹுத்திகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்...

10 வினாடிகளில் தகர்க்கப்பட்ட 144 மாடி அபுதாபி மினா பிளாசா கட்டிடம் – வீடியோ!

அபுதாபி (27 நவ 2020): சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக அபுதாபி 144 மாடி மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை தகர்க்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முறையைப் பயன்படுத்தி மிக உயரமான 144 மாடி கட்டிடமான மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 6,000 கிலோகிராம் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தனர். تمت بحمد الله عملية هدم أبراج ميناء بلازا ضمن مشروع تطوير…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு…

மேலும்...

அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் பலி!

அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர்…

மேலும்...