அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் நேபால், ஒருவர் இலங்கை மற்றும் ட்ரக் டிரவைர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.