ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்தாவது நபருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply