எஸ்டிபிஐ பெண் தலைவர் ஷாஹின் கவுசர் கைது!

புதுடெல்லி (27 செப் 2022): SDPI டெல்லி மாநில துணைத் தலைவர் ஷாஹின் கவுசர் கைது செய்யப்பட்டார். பிஎஃப்ஐக்கு எதிரான இரண்டாவது சோதனையில் ஷாஹீன் கௌசர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார். நாடு தழுவிய சோதனையில் பெண் தலைவரை என்ஐஏ கைது செய்வது இதுவே முதல் முறை. ஷாஹீன் கௌசர் டெல்லியில் சிஏஏ-வுக்கு எதிராக போராடி வந்தவர். இன்று, பல மாநிலங்களில்…

மேலும்...

ரிசார்ட்டில் பணிபுரியும் இளம் பெண் படுகொலை – பாஜக தலைவர் மகன் கைது!

ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது. பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்….

மேலும்...

துபாயில் பிச்சை எடுத்தல் மற்றும் சட்டவிரோத வர்த்தகம்; 2100 பேர் கைது!

துபாய் (14 செப் 2022): துபாயில் பிச்சை எடுத்ததற்காகவும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததற்காகவும் 2100 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. இதன்போது, ​​796 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,287 சட்டவிரோத வீதி வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதில் 414 பேர் போலீஸ் ஐ என்ற மொபைல் செயலி மூலம் சிக்கியுள்ளனர். சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வழிமுறை போலீஸ்…

மேலும்...

சவுதியில் 15000 வெளிநாட்டினர் கைது!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் சட்டத்தை மீறியவர்கள் 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை அனுமதி காலாவதியானவர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள், தொழிலாளர் சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்களைக் கண்டறியும் விசாரணை நாடு முழுவதும் வலுவாகத் தொடர்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ், பல்வேறு துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

மேலும்...

முஸ்லிம் முதியவர் படுகொலை – பஜக பிரமுகர் உட்பர 22 பேர் கைது!

லக்னோ (09 செப் 2022):உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் முஸ்லிம், முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை அன்று 55 வயதான முஸ்தகீமின் ஆடு ஒன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான சந்தீப்பின் வயலில் அலைந்ததை அடுத்து, இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது, அன்று மாலை, முஸ்தகீமின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்தகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த…

மேலும்...

மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

காந்திநகர் (26 ஜூன் 2022): குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று முன் தினம் தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர்…

மேலும்...

சொந்த காருக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடிய பாஜக நிர்வாகி!

சென்னை (16 ஏப் 2022): சென்னை மதுரவாயலில் தனது காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி பாஜக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48) பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இதையடுத்து…

மேலும்...

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...

நள்ளிரவில் பாஜக தலைவர் கைது!

சென்னை (08 ஏப் 2022): நள்ளிரவில் பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

சென்னை (23 பிப் 2022): அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

மேலும்...