ஹரித்வார் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் அருகே உள்ளார் ரிசார்ட் ஒன்றின் 19 வயது பெண் ரிஷப்சனிஸ்ட் கொலை வழக்கில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது ரிசார்ட் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளது.
பெண் கடந்த திங்கள்கிழமை காணாமல் போனாதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் இதில் புல்கித் ஆர்யவின் பங்கு இருப்பதாகவும் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.
விசாரணையை தொடங்கிய போலீசார் பின்னர், கால்வாயில் இருந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த கொலை விவாத பொருளானது. பாஜக பிரமுகரின் மகன் என்பதால் போலீஸ் வழக்கை தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இந்நிலையில் புல்கித் மற்றும் இரண்டு ரிசார்ட் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் கட்டுப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது எனினும் போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் உத்தரவின்படி புல்கித் ஆர்யாவின் ரிசார்ட் ஒரே இரவில் இந்த இடிக்கப்பட்டது.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்பு காரணமாக போலீசார் மெதுவாக விசாரணை செய்வதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது – “பெண் செப்டம்பர் 18 அன்று காணாமல் போனார், ஆனால் செப்டம்பர் 21 அன்றுதான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.” என்று – மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கரிமா மெஹ்ரா தசோனி கேள்வி எழுப்பினார்.
இதில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.