இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு…

மேலும்...

100 கிலோ மீட்டர் நடந்த புலம்பெயர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்!

லூதியானா (26 மே 2020): 100 கிலோமீட்டர் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் பிந்தியா மற்றும் அவருடைய கணவர் ஜதின் ராம் ஆகியோர் வேலை செய்துவந்துள்ளனர். 20 வயதைக் கடந்திருக்கும் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கின் காரணமாக 50 நாள்களுகும் மேலாக வேலையின்றி தவித்த அவர்கள், சொந்த ஊர் செல்வதற்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் நடக்கத் தொடங்கினர். 9 மாத கர்ப்பிணி…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

ஒரே மகனை விபத்தில் இழந்து தவித்த 54 வயது தாய்க்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

திருச்சூர் (16 ஜன2020): கேரள மாநிலத்தில் 54 வயது பெண்மணி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலோரைச் சேர்ந்த லலிதா என்பருக்குத்தான் இந்த மகிழ்ச்சியான தருணம் அமைந்துள்ளது. லலிதா -மணி தம்பதியினருக்கு இருந்த ஒரே ஒரு மகன் கோபிகுட்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்தில் பலியானார். இதனால் இருவரும் துயரத்தின் எல்லைக்கு சென்றனர். எனினும் லலிதா மீண்டும் குழ்ந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் அவரது வயது…

மேலும்...