திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா – கடும் ஊரடங்கு அறிவிப்பு!

டாக்கா (26 ஜூன் 2021): இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை…

மேலும்...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி!

போட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்…

மேலும்...

அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு!

கவுஹாத்தி (08 பிப் 2020): அஸ்ஸாமில் முஸ்லிம் அல்லாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்ட விவகாரங்கள் நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்ஸாமில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறியிருப்பவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களை விடுவிக்க அஸ்ஸாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி முஸ்லிம்கள் தடுப்பு…

மேலும்...

தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் தரை மட்டமாக்கப் பட்ட 300 முஸ்லிம் வீடுகள்!

பெங்களூரு (21 ஜன 2020): கர்நாடகாவில் பாஜக குழுமத்தில் வெளியான தவறான வாட்ஸ் அப் மெஸேஜால் 300 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் பொலந்தூர் ஏரி அருகே வசித்த சுமார் 300 முஸ்லிம் வீடுகள்தான் இடிக்கப் பட்டுள்ளன. திருத்தப் பட்ட குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு . நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெங்களூர்…

மேலும்...

ஒரு கோடி முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவார்கள் – பாஜக தலைவர் பேச்சு!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக உள்ள ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் அம்மாநில பாஜக தலைவர் திரு. திலீப் கோஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில். என்.ஆர்.சியை அமல்படுத்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இஸ்லாமியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் மீண்டும் பங்களாதேஷிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டம் குறித்து வங்கதேச பிரதமர் பதில்!

துபாய் (19 ஜன2020): இந்திய குடியுரிமை சட்டம் உள் நாட்டு விவகாரம் ஆனால் அது இப்போதைக்கு தேவையில்லாதது என்று வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேக் ஹசீனா, சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும்,…

மேலும்...