டாக்கா (26 ஜூன் 2021): இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அனைத்துவிதமான பயணங்களுக்கும் திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை தொடர்பான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.