ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!
திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி…