நியூயார்க் (24 ஜன 2020): அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது.
மேலும் அந்த சிறுவனுக்கு மொபைல் மூலம் ஆபாச படங்களை அனுப்பி, வசப்படுத்தி இருவரும் தனியாக வீட்டில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
இது பற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர், போலீசில் அளித்த புகாரை அடுத்து ரூமாவை போலீசார் கைது செய்தனர். சிறுவனுக்கு பாலியல் ரீதியாக துன்பறுத்தல் தந்துள்ளதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததற்காக, 11 லட்சம் ரூபாயும், தவறான நோக்கத்துடன் சிறுவனை கவர்ந்திழுத்ததற்காக, 7 லட்சம் ரூபாயும் செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ள, ரூமாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.