ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை (16 ஜூலை 20222): முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.