கொரோனா வைரஸ்: 6000 பேர் பாதிப்பு – 132 பேர் பலி!

Share this News:

பீஜிங் (29 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மேலும் சீனாவில் உள்ள இந்தியர்களை இந்தியா கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Share this News:

Leave a Reply