சென்னை (22 நவ 2021): நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.