இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1023 பேர் பலி!
புதுடெல்லி (28 ஆக 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1023 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76826 கொரோனாவால் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1023 பேர் பலியாகி உள்ளனர்.
