கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

Share this News:

சென்னை (24 ஆக 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் “மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் எஸ்.பி.பி. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். தந்தை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” இவ்வாறு எஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம் எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் உடல் தற்போது சீராக உள்ளதாகவும் எஸ்பிபியின் மகன் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply