மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர்.
டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதுடன், கொரோனாவை இந்தியாவில் பரப்பியதற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டிய ஊடகங்களையும் நீதிபதி கடுமையாக கண்டித்தார்.
மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அந்த முஸ்லிம்களின் மனதில் அச்சம் ஏற்பட்டது என்று கூறலாம். வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு எதிராக கிட்டத்தட்ட கடும் துன்புறுத்தல்கள் நடந்தன. கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினரை வீணில் பலிகடா ஆக்கிவிட்டது…. அதற்கான சூழ்நிலைகளும் அமைந்துவிட்டன.” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினரே என்பதாக இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றாக கூக்குரலிட்டமை குறிப்பிடத்தக்கது.