இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (15 ஜூலை 2020): இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 582 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...

சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692…

மேலும்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர்,…

மேலும்...

பாரசிடமால் மாத்திரை வாங்க மருத்துவர் சீட்டு அவசியமில்லை – தமிழக அரசு தகவல்!

சென்னை (14 ஜூலை 2020): பாரசிடமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. கொரோனா வைரசுக்கு காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சலும்…

மேலும்...

அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்!

மும்பை (13 ஜூலை 2020): நடிகர் அமித்தாப் பச்சன் குடும்பத்துக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்ற கேள்வியே தற்போது மேலோங்கி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், மற்றும் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்நிலையில் இந்நிலையில் வீட்டுக்குள் அடங்கி கிடந்த அமிதாபுக்கு யார்மூலம் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றதில், நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப்…

மேலும்...

அலறும் மகாராஷ்டிரா – கையை பிசையும் அரசு!

மும்பை (13 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,924- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 10,482-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது மகாராஷ்டிராவில் கொரோனா…

மேலும்...

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை!

சென்னை (13 ஜூலை 2020): தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

மேலும்...

மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது….

மேலும்...

வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (06 ஜூலை 2020):காற்றிலும் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கையில், தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!

புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் அதிகபட்சமாக ஏறக்குறைய 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது…

மேலும்...