சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

Share this News:

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர், ஏற்கெனவே கொரோனா தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this News: