தமிழகத்தில் கொரோனா கைமீறிவிட்டது – தமிழக அரசு தகவல்!
சென்னை (15 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறிவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால்,…
