தமிழகத்தில் கொரோனா கைமீறிவிட்டது – தமிழக அரசு தகவல்!

Share this News:

சென்னை (15 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறிவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்று மதியமே சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமை நீதிபதியை இன்று மதியம் அவரது இல்லத்தில் சுகாதாரத் துறைச் செயலர் சந்தித்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply