போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும்…

மேலும்...

கொரோனா நோயாளிகளுக்காக விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி!

புனே (15 ஜூன் 2020): கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்தவர்களில் உலகின் மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளராக உள்ளவர் விப்ரோ நிறுவன தலைவர் அஜீம் பிரேம்ஜி. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் , இந்தியாவின் முன்னணி வணிக அதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, கொரோனா…

மேலும்...

அடுத்த அதிர்ச்சி – தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 44 பேர் மரணம்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 – ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 – ஆகவும் உயர்ந்துள்ளது….

மேலும்...

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு!

சென்னை (15 ஜூன் 2020): சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. ஜூன் 19 முதல் 30 வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

அரசு அதிகாரிகளின் மெத்தனம் – வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பயணி பரிதாப மரணம்!

சென்னை (15 ஜூன் 2020):அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில்…

மேலும்...

அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது….

மேலும்...

தமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகள்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23…

மேலும்...

பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்க்க தடை!

சென்னை (14 ஜூன் 2020): அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலையில் பல்வேறு கோரிக்கைகளை அடுத்து தேர்வை ரத்து செய்து 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. இந்நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது…

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...