பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், தெப்சி மாவட்டத்தின் நிஜார் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு டிரக்கில் 16 மாடுகளைக் கொண்டு சென்றபோது, மாடுகளை கடத்தியதாக அமீன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு குஜராத் வியாராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை…

மேலும்...

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை!

கொழும்பு (11 டிச 2022): இலங்கையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

புதுடெல்லி (11 அக் 2022): பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த மனு 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மனுதாரரை எச்சரித்தார்.

மேலும்...

மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

லக்னோ (16 நவ 2021): உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை அரசு தொடங்கியுள்ளது. மோசமான நிலையில் உள்ள பசுக்களுக்காக இந்த சேவை தொடங்கப்படும் என்று விலங்குகள் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக 515 ஆம்புலன்ஸ்கள்யஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் டிசம்பரில் அமலுக்கு வரும். அவசரகால இலக்கமான 112க்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார். மேலும் அழைப்பு வந்த…

மேலும்...

மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்!

லக்னோ (28 அக் 2020): மாடுகளை வெட்டுவோர் சிறை செல்வதில் எந்தவித மாற்றமுமில்லை என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உபியில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டபோது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசு…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவர் கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் ரூபாய் 500 க்கு மாட்டு சிறுநீர் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மபூத் அலி என்ற பால் வியாபாரி, மாட்டு முத்திரம் விறபனை செய்வதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேஜை வைத்து மாட்டு மூத்திரம் விற்பனை செய்வதை போலீசார் அறிந்தனர். உடனே மபூத் அலியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, டெல்லியில் இந்து மகா சபா மாட்டு…

மேலும்...

அடப்பாவி – பசு மாட்டை கூட விட்டு வைக்காத காம கொடூரன்!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): கேரளாவில் கோவில் அருகே வைத்து பசு மாட்டை வன்புணரந்து கொலை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த யூசுப் என்பவர் பசுமாடு ஒன்றை வைத்து பராமரித்து வந்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவன் யூசுபின் பசுமாட்ட்டை கடத்திச் சென்று ஸ்ரீமுத்தப்பன் கோவில் அருகே வைத்து வன்புணர்வு செய்துள்ளான். இதில் அந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சுமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

மேலும்...