பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Share this News:

புதுடெல்லி (11 அக் 2022): பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த மனு 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மனுதாரரை எச்சரித்தார்.


Share this News:

Leave a Reply