சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் 50,000 கட்டிடங்கள்!
ஜித்தா (31 ஜன 2022): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் சுமார் 50,000 கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலின் ஒரு பகுதியாக, ஜித்தாவில் உள்ள குடிசைகள் உட்பட 138 பகுதிகளில் உள்ள 50,000 கட்டிடங்களை இடிக்க முனிசிபாலிட்டி இலக்கு வைத்துள்ளது. இதில் 13 பகுதிகளில் சுமார் 11,000 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மீதமுள்ள சிலவற்றை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவர்களுக்கு 68,000 தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்….