சவூதியில் நிலநடுக்கத்திலிருந்து கட்டிடங்களை பாதுகாக்க புதிய கட்டிட குறியீடு

ஜித்தா (25 பிப் 2023): சவுதி அரேபியாவில் புதிய கட்டிடக் குறியீடு அமலுக்கு வந்துள்ளது. கட்டுமானத் துறையில் உள்ள பொறியியல் அலுவலகங்கள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் திட்டங்களுக்கான திட்டங்கள் மற்றும் வடிவமைப்புகளைத் தயாரிக்கும் போது, ​​நிலநடுக்கத்தைத் தடுப்பது தொடர்பான விதிகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு, சவூதியின் பொறியியல் அலுவலகங்களை நகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன பொறியியல் நிறுவனங்கள் கட்டிடங்களையும்…

மேலும்...

அமெரிக்காவின் டெக்ஸாஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டெக்ஸாஸ் (17 டிச 2022 )டெக்ஸாஸ் அமெரிக்காவின் டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். மேற்கு டெக்சாஸில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழப்பு அல்லது வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். அதேபோல…

மேலும்...

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் – 6 பேர் பலி!

காத்மண்டு (09 நவ 2022): நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில்…

மேலும்...

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

டோக்கியோ (17 மார்ச் 2022): ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் புதன்கிழமை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 7.3 ரிக்டர் அளவிலான நடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு வலிமையாக குலுங்கியது. இதன் தாக்கம் வியாழன் காலையும் இருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரம்…

மேலும்...

குவைத்தில் திடீர் நிலநடுக்கம்!

குவைத் (02 ஆக 2021): வளைகுடா நாடான குவைத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் திங்கள் கிழமை காலை 11:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.5 ஆக பதிவாகியுள்ளது. குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,…

மேலும்...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா (29 ஜூலை 2021): அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் முதற்கட்ட தகவல்களின்படி, அலாஸ்காவின் சில பகுதிகள் கடற்கரையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் , உள்ளூர் நேரம் இரவு 10:15 மணியளவில் இந்த நிலநடுக்கம்…

மேலும்...