டெக்ஸாஸ் (17 டிச 2022 )டெக்ஸாஸ் அமெரிக்காவின் டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். மேற்கு டெக்சாஸில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழப்பு அல்லது வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.
அதேபோல மிட்லாண்டில் இருந்து வடமேற்கே சுமார் 14 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிட்லாண்டில் உள்ள தேசிய வானிலை சேவை மையம் டெக்சாஸ் மாநில வரலாற்றில் இது நான்காவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று ட்வீட் செய்துள்ளது.