நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….