சென்னை (20 மே 2020): ரம்ஜான் நோன்பில் வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் மூன்று நோன்பை மட்டுமே கடை பிடிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் 5 நோன்புகளை பிடிப்பார்.
ஆனால் இவ்வருடம் சில தவிர்கமுடியாத காரணங்களால் 3 நோன்பை மட்டுமே பிடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் “16ஆவதுஆண்டாக நோன்பு நாளை தொடங்குகிறேன். வழக்கமாக 5 நாட்கள் இருப்பதுண்டு. இந்த ஆண்டு #20முதல்_22வரை மூன்று நாட்கள் மட்டும் #நோன்பு இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
#16ஆவதுஆண்டாக நோன்பு நாளை தொடங்குகிறேன். வழக்கமாக 5 நாட்கள் இருப்பதுண்டு. இந்த ஆண்டு #20முதல்_22வரை மூன்று நாட்கள் மட்டும் #நோன்பு இருக்கிறேன். #ramzan2020 #Sahur #Iftar pic.twitter.com/17WNsHeuDF
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 19, 2020