கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Share this News:

கோதாவரி (06 செப் 2020): ஆந்திர மாநிலத்தில் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply